ஞாயிறு, 2 மே, 2010


மின்-துணை


பிறந்தது தனியாகத்தான்


வளர்ந்தது எட்டு குழந்தைகளின் மத்தியில்


நட்பு வட்டம் பெரிது


இளமையில் தனிமை என்பது படர்ந்ததில்லை


திருமணம்


கணவனின் ஆக்கிரமிப்பு


ஒரு நிமிடம் கூட தனித்திருந்ததில்லை


உறவும் நட்பும்


அவருக்கு அப்புறம் தான்


குழந்தை


ஒற்றை குழந்தை


அதன் உறவும் நட்பும்


எண்ணமும் வண்ணமும்


நான்தான்


குழந்தைப் பெரிதானது


கல்வி பிரிவு


வேலை பிரிவு


திருமண பிரிவு


விட்டு விலகியது


என்னுள் இருந்து


கணவனோ


இயற்கையின் பிடியில்


கட்டாயப் பிரிவு


இணைய முடியாத பிரிவு


இன்று நான்


தனிமை சிறையில்


ஒற்றையாய்.........


ஒற்றையாய்.........


பரிதவித்த எனக்கு


அமுதமாய் ஒரு துணை


இணையம்


இலக்கிய வாசிப்பு


இலக்கிய தேடல்


மறிதலிப்பு இல்லாத


மின் துணை


இதுதான் நிரந்தரம்


சுதந்திரம்


கற்றுக்கொண்டேன்


வாழ்க்கைப் பாடத்தை.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக